அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

X
Tiruvallur King 24x7 |5 Feb 2026 6:57 PM ISTசோழவரம் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சோழவரம் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தின் RTS - Road To School என்னும் திட்டம் அங்குள்ள 71 பள்ளிகளில் ஆரோக்கியம் சார்ந்த வகுப்புகளையும், அதே பள்ளியை சார்ந்த கிராமங்களில் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இன்று சின்னம்பேடு, பஞ்சட்டி, ஆங்காடு ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியை ஆரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கவரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் கர்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கும், கிராம பொது மக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர். இந்த சிறப்பான நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியர்கள் லதா (சின்னம்பேடு), முருகலட்சுமி - (ஆங்காடு) மற்றும் துணைத் தலைமையாசிரியர் சுஜாதா (பஞ்சட்டி) ஆகியோர் தலைமை ஏற்று கொடி அசைத்து துவக்கி வைத்தனர், மேலும் இப்பேரணி சிறப்பாய் நடைபெற அனைத்து ஏற்பாடுகளை அப்பகுதி களப் பணியாளர்கள் விக்னேஷ், மணிகண்டன், விஜய், வீரராவணன் காயத்ரி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி கிறிஸ்டோபர் அவர்கள் இணைந்து நடத்தினர்.
Next Story
