முத்துகுமாரசாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

முத்துகுமாரசாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  தீர்த்தக்குட ஊர்வலம்
X
குமாரபாளையத்தில் முத்துகுமாரசாமி மற்றும் மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம் அருகே சின்னப்பநாயக்கன்பாளையத்தில் முத்துகுமாரசாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, மஞ்சள் ஆடையுடன் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். சேலம் முதன்மை சாலை எடப்பாடி சாலை மற்றும் முக்கிய சாலைகள் வழியாக பம்பை மேளதாளம் முழங்க ஜல்லிக்கட்டு காளை மாடுகள், குதிரைகளுடன் நடனமாடியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். நேற்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. நாளை காலை 09:00 மணியளவில் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ மாரியம்மன். முத்துகுமாரசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஜீர்னோதாரண புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Next Story