சங்கராபுரம்: நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்...

X
Rishivandiyam King 24x7 |5 Feb 2026 8:57 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
சாலை பாதுசாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சங்கராபுரம், பிப். 4- சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சங்கராபுரம் உட் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து துவக்கி வைத்தார். சங்கராபுரம் உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி, சங்கராபுரம் உதவி பொறியாளர் மணிவண்ணன் மற்றும் சர்மா, முன்னிலை வகித்தனர். பங்கேற்று போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை வழங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். ஊர்வலம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை சாலை பணியாளர்கள், உட்கோட்ட அலுவலர்கள், திறன்மிகு உதவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
