நாமக்கல் இந்திரா நகர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!

X
Namakkal King 24x7 |5 Feb 2026 9:17 PM ISTமதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாமக்கல்–திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில், வியாழக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.காலையில் சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் மீண்டும் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டு சென்றனர்.
Next Story
