மோகனூரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்!

X
Namakkal King 24x7 |6 Feb 2026 3:01 PM ISTஇந்த முகாமில் மோகனூர் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் கா.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மோகனூரில் உள்ள சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற பிப்ரவரி 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.நாமக்கல் தங்கம் மருத்துவமனை மற்றும் இதர அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த முகாமில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் கா.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Next Story
