நீதிமன்றம் உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்.
Paramathi Velur King 24x7 |6 Feb 2026 9:16 PM ISTபரமத்தி வேலூர் அருகே நீதிமன்றம் உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பரமத்தி வேலூர், பிப்.6: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கான சுடுகாடு வருவாய் துறை பதிவேட்டின் படி பட்டா வேலவன் என்ற தனிநபர் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சுடுகாடு பகுதியில் தனிநபர் வேலவன் என்பவர் சுற்றுச்சுவர் (காம்பவுண்ட்) அமைத்துள்ளார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் சுடுகாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை அகற்ற நீதிமன்ம் சென்று உத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சுற்றுச் சுவரை அகற்றாமல் காலதாமதம் படுத்தி வந்துள்ளது. அதனை கண்டித்து வெள்ளிக்கிழமை திட்டமேடு பகுதி மக்கள் திடீரென கிராமத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி கிராமத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கோவிந்தராஜை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பரமத்தி வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் சங்கீதா திருச்செங்கோடு கோட்டாட்சியர் லெனின் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story


