அனைத்து கட்சியினருடன்ஆலோசனை கூட்டம் நடத்திய ஆர்.டி.ஓ., தாசில்தார்
Komarapalayam King 24x7 |7 Feb 2026 5:38 PM ISTகுமாரபாளையத்தில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்திய ஆர்.டி.ஓ., தாசில்தார்
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் அனைத்து கட்சியினருடன் ஆர்.டி.ஓ, லெனின், தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர் , பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பகுதி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும், உழவர் சந்தை பகுதி, பஸ் ஸ்டாண்ட், கிழக்கு வீதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், பழைய தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம், எனவும் அறிவுறுத்தப்பட்டது . டிவைடர்களில் எந்த அரசியல் கட்சியினரும் கொடி, பேனர்கள் கட்டக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் பிளெக்ஸ் பேனர் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி, தேர்தல் தாசில்தார் செல்வராஜ், குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ரமேஷ், தி.மு.க. சார்பில் செந்தில், ராஜேந்திரன், அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story


