தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கை குழுவின் மேற்கு மண்டல கருத்துக் கேட்பு நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கை குழுவின் மேற்கு மண்டல கருத்துக் கேட்பு நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
X
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித்தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படியும், கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் N. ஆனந்த் ஆலோசனையின் பேரிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குழுவின் பொதுமக்களிடையே கருத்துக்களை கேட்கும் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நிகழ்ச்சி மேற்கு மண்டலத்தின் (கொங்கு மண்டலம்) சார்பாக கோவை கனியூரில் உள்ள ரங்காஸ் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்டம், நாமக்கல், குமாரபாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை விண்ணப்பங்களாக வழங்கினர்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் தேர்தல் அறிக்கை அடங்கிய தொகுப்புகள், தேர்தல் அறிக்கை குழு நிர்வாகிகளிடம் இன்று முறையாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அண்ணன் K. வாசு சீனிவாசன் அவர்கள் மற்றும் K. சுந்தர்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வதற்கான முக்கிய முயற்சியாக அமைந்தது.இவண்,SN. சதிஷ்,மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்,மாவட்டக் கழகச் செயலாளர்,நாமக்கல் மேற்கு மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகம்.

Next Story