முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, இராசிபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சோபா கட்டுமான நிறுவனம் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை...

X
Rasipuram King 24x7 |7 Feb 2026 7:58 PM ISTமுத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, இராசிபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சோபா கட்டுமான நிறுவனம் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை...
துபாயில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் சோபா பிரைவேட் லிமிடெட் (Shobha Constructions.) நிறுவனத்தினர் டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவு வாயிலாக நேர்முக வளாகத் தேர்வு நடத்தினர். நேர்முகத் தேர்வில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், ஆலோசகர் முனைவர் ஷா.நவாஷ்கான், சோபா கட்டுமான நிறுவனம் மேலாளர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 45 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேர உள்ளனர். இதில் 6 பேர் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் நமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பணிநியமன ஆணையை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், ஆலோசகர் முனைவர் ஷா.நவாஷ்கான், சோபா கட்டுமான நிறுவனம் மேலாளர் சதிஷ்குமார் ஆகியோரால் வழங்கப்பட்டது. பணிநியமனம் பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.பிரேம்குமார் அவர்கள், கல்லூரியின் செயலாளர் திருமதி.ஆர்.ஜோதி மணி இராமசாமி அவர்கள், பொருளாளர் எஸ்.சர்வேஸ்வரி பிரேம்குமார். அவர்கள், முதல்வர் ஜி.விஜயகுமார் மற்றும் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, அனைத்து துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
