நைனாமலை பகுதியில் மலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Namakkal King 24x7 |7 Feb 2026 9:27 PM ISTஒரே நாளில் சுமார் 1000 கிலோ அளவிலான நெகிழி பைகள், பேப்பர் குப்பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்கள் மற்றும் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
நைனாமலை ஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோவில் மலைப்பகுதியில்,பசுமை தாயகம் சார்பில் மலை பாதுகாப்பு மற்றும் நெகிழி பொருட்கள் அகற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை பசுமை தாயகம் அமைப்பும், செல்வம் கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்தினர்.பசுமை தாயகம் அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள் சுமார் 1500 படிக்கட்டுகள் கொண்ட மலைப்பகுதி முழுவதும் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பைகள், காகிதக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றினர். ஒரே நாளில் சுமார் 1000 கிலோ அளவிலான நெகிழி பைகள், பேப்பர் குப்பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்கள் மற்றும் பாட்டில்கள் அகற்றப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்பு செயலாளர் காமராஜ், பசுமைத்தாயகம் பொறுப்பாளர்கள் மனோஜ், சந்துரு, சின்னத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரவை மாநில துணைத் தலைவர் பொன்.ரமேஷ் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
Next Story
