திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறு பதிவு – விசிக நிர்வாகி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறு பதிவு – விசிக நிர்வாகி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
X
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாமக்கல் எம்ஜிஆர் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களை சமூக வலைதளத்தில் அவதூறாகவும், இழிவான முறையிலும் விமர்சித்து பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விசிக நாமக்கல் மண்டல செயலாளர் பழ.மணிமாறன் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.நாமக்கல் கந்து முத்துசாமி தெருவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், தனது “MGR” என்ற முகநூல் கணக்கின் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதிவு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவுகள் கட்சித் தலைவர் மற்றும் தொண்டர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்படி நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story