காவல்துறையினருக்கு நினைவூட்டும் பயிற்சியின் முதல் வாரம் இன்று நிறைவடைந்தது.
Perambalur King 24x7 |7 Feb 2026 9:36 PM ISTபயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் 40 காவல்துறையினர் (காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை) கலந்து கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினருக்கு நினைவூட்டும் பயிற்சியின் முதல் வாரம் இன்று நிறைவடைந்தது. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் கடந்த 02.02.2026 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இப்பயிற்சியானது 6 வார காலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று 07.02.2026 முதல் பேட்ச்க்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியில், காவல்துறையினர் பொதுமக்களிடம் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை, குற்றவாளிகள் மற்றும் எதிரிகளை கையாளும் நடைமுறைகள், புகார்களைப் பெற்று முறையாக வழக்குப்பதிவு செய்வது, சாட்சிகளை விசாரிக்கும் விதிமுறைகள், நீதிமன்ற அலுவலகப் பணிகளை கையாளும் நடைமுறைகள், மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகள், சிறார்கள் தொடர்பான வழக்குகள், காவல் நிலைய பதிவேடுகளை பராமரிக்கும் முறை ஆகிய தலைப்புகளில் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் 40 காவல்துறையினர் (காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை) கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தப் பயிற்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்) பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் மங்களமேடு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கர்ணனன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கி வருகின்றனர். முதற்கட்டமாக இப்பயிற்சி வகுப்பு ஒரு வார காலம் நடைபெற்றது. மேலும், மது போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் எவ்வாறு அணுக வேண்டும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை (Counselling) வழங்கும் முறை, e-Sakshya Portal-ல் தரவுகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது போன்ற தலைப்புகளில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரசு வழக்கறிஞர் மற்றும் மனநல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
Next Story



