தீ தடுப்பு விழிப்புணர்வு

ஆபத்து காலங்களில் நம்மை நாம் எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு தீயணைப்பு மீட்புத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில் அந்தந்த நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் தனியார் தொழிற்சாலைகள் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் குடியிருப்பு கட்டிடங்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சியும் அவசர காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த பயிற்சியும் இன்றைய தினம் நடத்தப்பட்டது அந்த வகையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையைச் சார்ந்த ஒன்பது நிலையங்களிலும் ஆங்காங்கே பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஆனது மேற்கொள்ளப்பட்டது அந்த வகையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் பெரம்பலூர் பகுதியில் பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை விழிப்புணர்வு பயிற்சி ஆனது நடத்தப்பட்டது மாவட்ட அலுவலர் அனுசியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையிலான தீயணைப்பு குழுவினர் நடத்தினர் இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி கல்வி குழுமத்தைச் சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டார்கள் தீயணைப்பு கருவிகளை கையாளுதல் மின்சார தீ விபத்து மற்றும் வாகன பாதுகாப்பு மாணவர்களை விரைவாக வெளியேற்றுதல் பயிற்சி உள்ளிட்டவை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது அது குறித்து கலந்து கொண்ட அத்தனை பாதுகாவலர்களுக்கும் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன பயிற்சியில் கலந்து கொண்ட பாதுகாவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story