டூவீலர், கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |9 Feb 2026 6:49 PM ISTகுமாரபாளையம் அருகே டூவீலர், கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் படுகாயமடைந்தார்
குமாரபாளையம் வேதாந்தபுரம், மாதா கோவில் அருகே வசிப்பவர் பத்ரிநாராயணன், 26. பல கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் தனது பஜாஜ் பிளாட்டினா டூவீலரில், பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே, இவரது உதவியாளர் பிரவீனுடன் வந்த போது, இவருக்கு முன்பு சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத காரின் ஓட்டுனர், திடீரென்று, இடது புறமாக திருப்பினார். இதனால் நிலை தடுமாறிய நிலையில் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. கூட வந்தவர்க்கு எவ்வித காயமும் இல்லை. பத்ரிநாராயணன் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story
