தனியார் துறை பாதுகாவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது

X
Pallipalayam King 24x7 |9 Feb 2026 6:52 PM ISTதீயணைப்பு துறை சார்பில் தனியார் துறை பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு ஆலோசனை வழங்கபட்டது....
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை தீயணைப்பு நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது . இதில் பல்வேறு தனியார் துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் , வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் ? உடனடி நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான பல்வேறு விவரங்கள் எடுத்துரைத்து பேசப்பட்டது. தனியார் துறை பாதுகாவலர்களுக்கு வெப்படை தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் பயிற்சிகள் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தனியார் துறை பாதுகாவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என தீயணைப்பு துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
