பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களுடன் லாரி சங்க அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

வாடகை பாக்கி தொகை பெற்றுத்தரக்கோரி லாரி உரிமையாளர்கள் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களுடன் லாரி சங்க அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் பரபரப்பு லாரி உரிமையாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

சென்னையை சேர்ந்த ஞானசம்பந்தன் என்பவர் மூலம் கிரேட் சிப்ட் ஷிப்பிங் சப்போர்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 43 லாரிகள் வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிமெண்ட் லோடு கொண்டு செல்லும் பணியை 3 மாதங்கள் மேற்கொண்டன. இப்பணியை மேற்கொண்ட லாரி உரிமையாளர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே வாடகை தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள மாதங்களுக்கு வாடகை தராததால் லாரிகளை இயக்காமல் லாரி உரிமையாளர்கள் நிறுத்தி வைத்தனர்.இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.50 இலட்சத்தை பெற்றுத்தரக்கோரி நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தை பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் கையில் பூச்சிக்கொல்லி மருந்துடன் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் லாரி உரிமையாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து சங்க தலைவர் அருளிடம் கேட்டபோது லாரிகளை இயக்கிய உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் காசோலை வழங்கி உள்ளது, அந்தந்த உரிமையாளர்கள் காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம், தலைவர் பதவி நிறைவடைவதால் வேண்டுமென்றே தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்

Next Story