விபத்து தழும்பு மன அழுத்தத்தால் இளைஞர் தற்கொலை

X
Komarapalayam King 24x7 |9 Feb 2026 6:59 PM ISTகுமாரபாளையம் அருகே விபத்து தழும்பு மன அழுத்தத்தால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
குமாரபாளையம் பைபாஸ் சாலை, ரெட்டியார் லைன் வீட்டில் வசித்து வருபவர் சதீஷ்குமார், 30. ஒரு வருடம் முன்பு நடந்த விபத்தில், இவருக்கு வலது கண் புருவம் அருகே காயம் ஏற்பட்டு, தழும்பு உள்ளது. இதனால் இவர் திருமணம் ஆகவில்லை என்று, மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் உறவினர் விசேஷத்திற்கு சென்ற, இவரது தாயார் செல்வி, 52, நேற்று மாலை 05:15 மணிக்கு திரும்ப வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். கதவு திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைக்க, சதீஷ்குமார் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து செல்வி புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
