பள்ளிபாளையம் நகராட்சியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்

பள்ளிபாளையம் நகராட்சியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்
X
பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தமிழக முதல்வரால் திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் தயாளன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார் . மேலும் நிகழ்வின் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு காலை நேர உணவாக வெண்பொங்கல், இட்லி, கேசரி ஆகியவை வழங்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட ஐந்து இடங்களில் காலை உணவு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்வில் நகர திமுக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள்,நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story