முள்கம்பி வேலி அகற்ற கோரி நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

முள்கம்பி வேலி அகற்ற கோரி நாமக்கல் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு போராட்டம்
X
கோட்டாட்சியர் சாந்தி, விரைவில் முள்கம்பி வேலிகளை அகற்றி பொதுப்பாதையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கைகாட்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான பொதுப்பாதையை மறைத்து முள்கம்பி வேலி அமைக்கப்பட்டதாகக் கூறி, அதனை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் நாமக்கல்–மோகனூர் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் சாந்தி, விரைவில் முள்கம்பி வேலிகளை அகற்றி பொதுப்பாதையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Next Story