சிப்காட் திட்டம் தொடர்பாக விவசாயிகள் புகார் – சிபிசிஐடி விசாரணை கோரிக்கை!

X
Namakkal King 24x7 |9 Feb 2026 8:17 PM IST1997 படி, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன் விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி மற்றும் அரூர் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள சிப்காட் திட்டத்திற்கான நில எடுப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி,பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.சிப்காட் நில எடுப்பு சட்டம், 1997 படி, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன் விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மோகனூர் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டதாகவும், ஆனால் அவை உரிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படாமல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, ஆவணங்கள் கோர்த்து வைக்கப்பட்டுள்ளதாக சிப்காட் அலுவலகம் பதிலளித்தது அநியாயம் எனவும் கூறினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
