ஆரணி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்.

ஆரணி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்.
X
ஆரணி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி துவக்கி வைத்தார்.
ஆரணி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி துவக்கி வைத்தார். சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தமிழக முதல்வர் துவக்கி வைத்ததையொட்டி ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் இத்திட்டத்தினை துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அனைவரையும் நகராட்சி ஆணையாளர் என்.டி.வேலவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார். இதில் மாவட்டதுணை செயலாளர் ஜெயராணிரவி, தொகுதிபொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகரபொறுப்பாளர் சைதை வ.மணிமாறன்,ஒன்றியசெயலாளர்கள் சுந்தர், துரைமாமது, மோகன், முன்னாள் ஒன்றிய குழு துணைத்த லைவர் கே.டி.ராஜேந்திரன், மாவட்டபிரதிநிதி பாலமுருகன், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Next Story