நைனா முகம்மது மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்கினார்.

நைனா முகம்மது மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்கினார்.
X
கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அறக்கட்டளை உறுப்பினர்களாகிய ஹாஜி நைனா முகம்மது, அப்துல் நாசர், அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் நை.முகம்மது பாரூக் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.திருச்செல்வம் வாழ்த்தி பேசினார்.
நைனா முகம்மது மகளிர் கல்லூரியில் தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் விழா அறந்தாங்கி,பிப்.10- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த இராஜேந்திரபுரம் நைனா முகம்மது மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்கினார். கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அறக்கட்டளை உறுப்பினர்களாகிய ஹாஜி நைனா முகம்மது, அப்துல் நாசர், அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் நை.முகம்மது பாரூக் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.திருச்செல்வம் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவவீ மெய்யநாதன் 92 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில் தமிழக அரசானது மகளிர்களுக்கு முன்னுரிமை அளித்து மகளிர் விடியல் பயணம், புதுமை பெண் திட்டம் மற்றும் பல நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி கொண்டு இருக்கிறது. உலகம் உங்கள் கையில் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியதை அமைச்சர் அவர்கள் உரையில் எடுத்துரைத்தார். மேலும் மாணவிகள் தங்களது அறிவு மேம்பாட்டு திறனை வளர்த்து கொள்வதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். மேற்பனைக்காடு அப்துல் பாரி, கிரசெண்ட் பள்ளியின் நிர்வாகி அசாருதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.வணிக மற்றும் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் வீ புவியரசு வரவேற்புரையாற்றினார். இவ்விழாவினை முத்து தாரணி மற்றும் அன்பில் இளவரசி ஆகியோர் தொகுத்து வழங்கினர். கணினி அறிவியல் துறைத்தலைவர் க சாமுண்டீஸ்வரி நன்றியரையாற்றினார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சண்முகநாதன் மற்றும் அறந்தாங்கி நகர்மன்ற உறுப்பினர் துளசி ராமன் அனைத்து துறைத்தலைவர்கள் குமரன், பெஞ்சமின்பிராங்ளின், பாரதி, சோபனா, சிந்து, சிந்துஜர் மற்றும் இருபால் பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள், கழக நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் மேலாளர் மாரிசாமி மற்றும் நா அருள் பாண்டியன் செய்திருந்தனர்.
Next Story