ராசிபுரம் அருகே சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து பழங்குடியின மக்கள் சாலையை மறித்து தர்ணா போராட்டம் சாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்..

X
Rasipuram King 24x7 |10 Feb 2026 9:01 PM ISTராசிபுரம் அருகே சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து பழங்குடியின மக்கள் சாலையை மறித்து தர்ணா போராட்டம் சாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்..
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலக்குறிச்சி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதில் 50 மலைவாழ் மக்கள் குடும்பத்தினருக்கு நீண்ட காலமாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து முள்ளுக்குறிச்சியில் சாலையை மறித்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடு இல்லாத மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும், பொதுமக்கள் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அதேபோல் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் திருமண மண்டபத்தை அமைக்காமல் கரட்டுப்பகுதியில், மண்டபத்தை கட்டிட அரசு நடவடிக்கை எடுப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள், ஊருக்கு நடுவில் மண்டபத்தை கட்டிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகளும், பாஜக மாநில திட்ட பிரிவு லோகேந்திரன், ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்க சென்ற போது அங்கு அலுவலர் இல்லாமல் பூட்டி இருந்தது பார்த்து அருகில் நின்றிருந்த காவல்துறை அதிகாரியிடம் மனுவை வழங்கி கலைந்து சென்றனர்.
Next Story
