ஓம் ஸ்ரீ மகா வாராகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
Perambalur King 24x7 |11 Feb 2026 9:04 PM ISTபெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் எல்லைக்குட்பட்ட, திருமங்கலியம்மன் நகரில் அருள்பாலித்து வரும் ஓம் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் ஆலயத்தில், காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர், குபேர லிங்ககேஸ்வரர் ஆகிய சிலைகள் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே பிரதிஷ்டை பெற்ற ஓம் ஸ்ரீ மகா வராகி அம்மன், காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் குபேர லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் எல்லைக்குட்பட்ட, திருமங்கலியம்மன் நகரில் அருள்பாலித்து வரும் ஓம் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் ஆலயத்தில், காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர், குபேர லிங்ககேஸ்வரர் ஆகிய சிலைகள் அமைக்கப்பட்டது. இதற்கு முறைப்படி சிவனடியார் சரவணன் தலைமையில், கலசங்கள் வைத்து யாகசாலை அமைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு புனித நீரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதியான பெரம்பலூர், எளம்பலூர், வடக்கு மாதவி, செங்குணம், கோனேரி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வராகி அம்மன் நிறுவனர் ரஞ்சித், ஒருங்கிணைப்பாளர் சண்டிகா தேவி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story



