முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2025 முதல் 30.06.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

X
திட்டமில்லா பகுதியில் அமையும் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2025 முதல் 30.06.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். ------ திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண். 92 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ(3)) துறை நாள்.26.06.2025-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும்பட்சத்தில் அரசு கடிதம் குறிப்பிடப்பட்டுள்ள.15535/5.1.4(3)/2019 நாள் 18.02.2020-அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in ல் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story

