போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களுக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனை

X
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 17 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன்(25) கோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர்கள் உட்பட 03 நபர்களை சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன், நீதிமன்ற தலைமை காவலர் கலைச்செல்வி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டாம் குற்றவாளிக்கு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முதல் மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான தமிழரசன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 53 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

