உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நாளை (02.09.2025) சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தெரணி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது -

X
முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும். மேற்படி முகாம்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் அரசுத்துறைகள் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த விளக்க பிரசுரங்கள் ஆகியவை இதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு
பெரம்பலூர் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நாளை (02.09.2025) சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தெரணி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனு வழங்கி பயன்பெறலாம். இம்மனுக்கள் அனைத்தும் இணைய வழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 02.09.2025 அன்று பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட தெரணி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், 03.09.2025 அன்று வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட 36.எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி மற்றும் குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஒகளுர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 04.09.2025 அன்று ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும். மேற்படி முகாம்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் அரசுத்துறைகள் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த விளக்க பிரசுரங்கள் ஆகியவை இதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வீடு வீடாக நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளைத்தேடி வரும் தன்னார்வலர்கள் வழங்கும் மேற்படி விண்ணப்ப படிவங்களை பெற்று, அவற்றை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம் தினத்தன்று, முகாம்கள் நடைபெறும் இடத்திற்கு சென்று மேற்படி விண்ணப்பங்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story

