போக்சோ வழக்கில் 05 ஆண்டுகள் சிறை தண்டனை

X
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆத்தூர் சித்தையான்கோட்டை பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(22) என்பவரை விளாம்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் அறிவுறுத்தலின்படி நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், நீதிமன்ற தலைமைக் காவலர் ஸ்டெல்லா மேரி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி நரசிம்மன் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 31 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

