பொதுமக்களின் வசதிக்காக, 05 புதிய பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் பணிமனைக்குட்பட்ட ஐந்து புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03.08.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் வசதிக்காக, 05 புதிய பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் பணிமனைக்குட்பட்ட ஐந்து புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03.08.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வுகளில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது : மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கின்றார். நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து அண்டை மாநிலங்களும், வெளிநாடுகளும் செயல்படுத்தி வருவது மிகவும் பெருமைக்குரியதாகும். தமிழ்நாட்டுப் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச்செய்யும் உயர்ந்த நோக்கத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான விடியல் பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். ஏழை எளிய மக்களின் போக்குவரத்து செலவினை குறைக்கும் வகையில் நமது மாநிலத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் எரிபொருள் சேமிப்பிற்காகவும் இயற்கை எரிவாயு மூலமாக இயங்கக்கூடிய சி என் ஜி பேருந்து சேவையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் நவீன மயமாக்கப்பட்டு பொதுமக்கள் வசதிக்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வரப்படுகிறது அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், திருச்சி மண்டலம், பெரம்பலூர் பணிமனைகுட்பட்ட 5 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், வசதிக்காகவும், தலா ரூபாய் 43 லட்சம் மதிப்பீட்டிலான பி.எஸ் 6 புதிய பேருந்துகளாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது அதன்படி அரியலூரில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் 02.20மு.ப மணிக்கு ஒரு பேருந்தும், 10.35 மு.ப மணிக்கு ஒரு பேருந்தும் என இரண்டு 02 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திற்கும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் 09.30.மு.ப. மணிக்கும், 11.40.மு.ப. மணி என 02 பேருந்துகள் விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்திற்கும், ஆத்தூர் முதல் மதுரை செல்லும் பேருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 08.45 மு.ப. மணிக்கு திருச்சி வழியாக செல்லும் வகையில் புதிய பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துசேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், துரைசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் டி சதீஷ்குமார், பெரம்பலூர் கோட்ட துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எம்.எஸ்.ஜி.புகழேந்தி ராஜ், கோட்ட மேலாளர் ராம்குமார், பெரம்பலூர் கிளை மேலாளர் தண்டாயுதபாணி முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் போக்குவரத்துத் துறை பணியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story