இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 05-06-2025 உலக சுற்றுச் சூழல் தினம்
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 05-06-2025 உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்க கூட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு , சுற்றுச் சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் அம்மாபாளையம் மருத்துவமனை முதுநிலை கண் மருத்துவர் செந்தில் நாதன் முன்னிலையில் பேரணி நடைபெற்றது. பள்ளிக்கு முன்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர்கள் செல்வராணி சிலம்பரசி அருணா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பிற்பகல் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இந்தோ அறக்கட்டளை சார்பில் மாணவ மாணவிகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் வழங்கினார். இனிமேல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
Next Story




