ராமநாதபுரம்- தாம்பரம்- ராமநாதபுரம் (06104/06103) பொங்கல் பண்டிகை சிறப்பு விரைவு ரயில் 

ராமநாதபுரம்- தாம்பரம்- ராமநாதபுரம் (06104/06103) பொங்கல் பண்டிகை சிறப்பு விரைவு ரயில் 
ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (ஜனவரி 14,15,16) தெற்கு ரயில்வே சார்பில் ராமநாதபுரம் - தாம்பரம் - ராமநாதபுரம் (06 104/06103) வாரம் இரு முறை சிறப்பு விரைவு ரயில்  இயக்கப்பட உள்ளது.  இந்த  ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் (06104 ) வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனவரி 10 ,12 ,17 ஆகிய மூன்று நாட்களில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு இரவு 7 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக சென்று தாம்பரத்தை சனி, திங்கள்கிழமைகளில்  அதிகாலை 03.30 மணிக்கு சென்றடையும். அதுபோல  மறுமார்க்கத்தில் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (06103) சனி, திங்கள்கிழமைகளில் ஜனவரி 11,13,18  ஆகிய மூன்று நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட தடத்தின் வழியாக பட்டுக்கோட்டைக்கு நள்ளிரவு 12.33 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து ராமநாதபுரத்திற்கு ஞாயிறு, செவ்வாய்க்கிழமை காலை 5.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலில் மூன்றடுக்கு  குளிர்சாதன வசதி பெட்டிகள் -10, தூங்கும் வசதி பெட்டிகள் 7, மாற்றுத்திறனாளிகள் பெட்டி ஒன்று, பிரேக் வேன் ஒன்று ஆக மொத்தம் 19 எல்.எச்.பி கோச்சுக்களுடன் இயங்கும். இதற்கான முன்பதிவுகள் ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து துவங்கி நடைபெறுகிறது . பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின்  தலைவர் வ.விவேகானந்தம் துணைத் தலைவர்  வே.ராமலிங்கம், செயலாளர் க.தமிழ்செல்வன், துணைச் செயலாளர் கு.முகேஷ் பொருளாளர் ஈகா வைத்தியநாதன், செயற்குழு உறுப்பினர் ப.ஆத்மநாதன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.  மேலும், பொங்கல் பண்டிகை சிறப்பு ரயிலை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story