அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 09 கடைகளுக்கு இன்று சீல்
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 09 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட காவல் கண்களிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவர்கள் அழகுவேல்,கதிரவன், சின்னமுத்து, விக்னேஷ், புவனா ஆகியோர் கொண்ட குழு வேப்பூர் மற்றும் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட FIR -ன் அடைப்படையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுகலந்த நிக்கோட்டின் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ஶ்ரீ அம்மன் மளிகை குன்னம், சங்கர் டீ ஸ்டால் சின்னவென்மணி, சித்ரா பெட்டி கடை பழைய அரசமங்களம், ஆவின் பாலகம் திருமாந்துறை, திருமலை ஸ்டோர்ஸ் பெருமத்தூர், புனிதவள்ளி பெட்டி கடை வரகுபாடி, ராணி பெட்டி கடை இரூர், சேகர் பெட்டி கடை செட்டிக்குளம், லாடாபுரம் கதிரேசன் பெட்டி கடை ஆகிய கடைகளானது உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளால் மூடப்பட்டு தலா 25000/- ரூபாய் வீதம் (ரூ.2,25000) ஒன்பது கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடர்பான புகார்களுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல்அலுவலகத்திலோ அல்லது 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மற்றும் TN DRUG FREE App என்ற செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம்.
Next Story









