மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ.1கோடி அபராதம் வசூலிப்பு

X
கோப்பு படம்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ.1கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ரயில் நிலையங்கள், ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன. இதன் மூலம் மதுரை கோட்டம் பயண சீட்டு பரிசோதனை வருமானமாக ரூபாய் 1,08,12,026 ஈட்டியுள்ளது. பயண சீட்டுகள் இல்லாமலும், குறைபாடு உடைய பயணச்சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15,734 பேர் பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து பயணக்கட்டணத்துடன் அபராதமாக ரூபாய் 1,06,13,680 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யாமல் அதிக அளவு உடைமைகளை ரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூபாய் 1,98,346 வசூலிக்கப்பட்டுள்ளது.என மதுரை ரயில்வே கோட்டம் தகவல்.
Tags
Next Story
