தனியார் நிறுவனத்திற்கு ரூ1கோடி இழப்பீட்டு தொகை வழங்கல்!

தனியார் நிறுவனத்திற்கு ரூ1கோடி இழப்பீட்டு தொகை வழங்கல்!


ஏரலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்திற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.


ஏரலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்திற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஏரலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்திற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக ரூ.1கோடி இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள பிரபல சின்னத்துரை அன் கோ ஜவுளி கடை தரை தளம் முற்றிலும் மூழ்கியது. இதனால் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் சேதம் ஆனது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துறை மூலம் உரிய இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்திற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக இழப்பீட்டுத் தொகையாக ரூ.1கோடிக்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, நிறுவனத்தின் பங்குதாரரான அரி ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

Tags

Next Story