எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி க்கு 1 மாதம் குடிநீர்  வரவில்லை என்று அதிகாரி சிறைபிடிப்பு - பொதுமக்கள் வேதனை 

கொடுவாய் அருகே எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை என்று அதிகாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கொடுவாய் அருகே உள்ளது எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு 18க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளது. பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் வரவில்லை என்று கூறி  வடசின்னரிபாளையம் ஊராட்சியில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் என்று கூறக்கூடிய நீருந்து நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளனர்.பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் 2 நாட்களுக்குள் சரி செய்து குடிநீர் வழங்குவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். காங்கேயம் அடுத்த கொடுவாய் அருகே உள்ளது எல்லப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு 18க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளது. இதில் எல்லப்பாளையம் ,எல்லப்பாளையம் புதூர் காலனி, நிழலி,சக்திவிநாயகபுரம்,கவண்டாம்பாளையம் ,நாடார்பதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  காங்கேயத்தில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊர்களுக்கு குடிநீர் செல்வதில் பல்வேறு இடையூறுகள்  ஏற்படுகின்றது.  குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதை சரி செய்வதில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காலதாமதம் படுத்துவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஒரே ஒரு கேட் வால் பழுதானதால் அதை சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும் படி செய்யாமல் ஒரு மாத காலமாக கால தாமதப்படுத்தி உள்ளது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள். இதனால் இன்று ஆத்திரமடைந்த எல்லப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் காலனி பொதுமக்கள் 80க்கும் மேற்பட்டோர் வடசென்னரி பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள நீருந்து நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரனை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க குடிநீர் குழாய் உள்ள இடத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதி மக்கள் விவசாய பணிக்கு கூலி தொழில் செய்யப் போவதாகவும் இரவு நேரத்தில் அன்றாட தேவைக்கு குடிநீர் பிடிக்க குடிநீர் குழாய் பகுதியிலேயே இரவு நேரம் காத்திருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஓரிரு நாட்களில் சரி செய்து கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்ததை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த நீருந்து நிலையத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பழுதாகி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் நீர்ந்து நிலையத்திற்கு முன் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனரேட்டர் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெளியிலே வைக்கப் பட்டுள்ளது. அதில் எலி மற்றும் பூச்சிக் கூடுகள் கட்டி பயன்பாட்டில் இல்லாமல் அரசு பணத்தில் வாங்கியது மழை வெயில் ஆகியவற்றில் நனைந்து வெளியே வைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கின்றது என்கின்றனர்.
Next Story