குடிசை வீடு தீப்பற்றி எரிந்து 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
Tiruvallur King 24x7 |17 Aug 2024 5:07 AM GMT
ஆரணி அருகே வடக்கு நல்லூர் ஊராட்சியில் செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தில் மூதாட்டியின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்ததால் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 1 சவரன் தங்க நகை,20,000 ரொக்க பணம் தீயில் எரிந்து நாசம்
ஆரணி அருகே வடக்கு நல்லூர் ஊராட்சியில் செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தில் மூதாட்டியின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்ததால் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 1 சவரன் தங்க நகை,20,000 ரொக்க பணம் தீயில் எரிந்து நாசம். திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த வடக்கு நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சந்திரம்மாள்(68) இவரது கணவர் துரைசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் சந்திரம்மாள் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் தனியாக விவசாயி கூலி வேலை செய்து வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை சந்திரம்மாள் வீட்டை பூட்டி விட்டு அதே கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் ஆரணி காவல் காவல்துறையினர் மற்றும் பொன்னேரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிவித்தும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் பொன்னேரி தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதமானதால் மூதாட்டியின் குடிசை வீடு முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 1சவரன் தங்க நகை, 20,000 ரொக்கம் தீயில் எரிந்து நாசமானது மூதாட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story