ராசிபுரத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Rasipuram King 24x7 |17 Aug 2024 1:17 PM ISTராசிபுரத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவர் பயிற்சி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராசிபுரத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மூடப்பட்டதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு.. கொல்கத்தாவில் மருத்துவ பயிற்சி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள்,இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து,உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் அவசர சிகிச்சை மட்டுமே தற்போது தனியார் மருத்துவமனை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளதால் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்..
Next Story



