உடுமலை போடிபட்டி ஊராட்சியில் 1 கோடி புகார் -வட்டாட்சியர் விசாரணை

மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுபடி
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சியில் 2020 ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை 1 கோடியே 56 ஆயிரம் நிதி இழப்பு மற்றும் முறைகேடுகள் நடைபெற்றது குறித்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜ் மற்றும் உறுப்பினர்களிடம் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் இன்று விசாரணை நடத்தி வருகிறார்.இதில் கவுன்சிலர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் சுமார் ஒரு கோடிக்கு மேல் முறைகேடு புகார் எழுந்த நிலையில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வரும் நிகழ்வு இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story