சேத்துப்பட்டில் பழமை வாய்ந்த விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல். 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Arani King 24x7 |24 Sep 2024 5:16 PM GMT
ஆரணி, செப் 24. சேத்துப்பட்டு பழமை வாய்ந்த விநாயகர் கோயிலை இருக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.
சேத்துப்பட்டு, பேரூராட்சி ராஜாஜி, தெருவில் பழமை வாய்ந்த விநாயகர், கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து புதிய கோயில் கட்ட அந்த பகுதி மக்கள் முடிவு செய்து. கோவிலை புதிதாக கட்டி, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கோவில் அருகே வசிக்கும் தனிநபர் ஒருவர் இந்த கோவில் என்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ளதாக. சென்னை,உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் 25ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப் பகுதியில் வாழும் பொதுமக்கள், இளைஞர்கள், சுமார் 200க்கும் மேற்பட்டோர் திடீரென சேத்துப்பட்டு, நான்கு முனை சந்திப்பில் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கோவிலை இடிக்க கூடாது என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேத்துப்பட்டு, போளூர், ஆரணி, வந்தவாசி, செஞ்சி, ஆகிய நான்கு முக்கிய சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜாராம், சேத்துப்பட்டு, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. மேலும் பழமை வாய்ந்த எங்கள் பகுதி கோவிலை நாங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டவில்லை ஆகையால் எங்கள் கோவிலை இடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், என்று கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போளூர், டி.எஸ்.பி மனோகரன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். பின்னர் வட்டாட்சியரிடம் இது குறித்து முறையிட்டனர். இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் கோரிக்கையை நாங்கள் மேலே தெரிவிப்போம் என்று உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Next Story