ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா அம்மனுக்கு 1 டன் மலர்கள் தூவி பூச்சாட்டுதலுடன் துவக்கம்.

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா  அம்மனுக்கு 1 டன் மலர்கள் தூவி பூச்சாட்டுதலுடன் துவக்கம்.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா அம்மனுக்கு 1 டன் மலர்கள் தூவி பூச்சாட்டுதலுடன் துவக்கம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத கோவில் திருவிழா சிறப்பாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி திருத்தேர்விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக ராசிபுரம் கைலாச நாதர் கோவிலில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு கட்டளைத்தாரர்கள் ஊர்வலமாக சென்று செல்லாண்டியம்மனுக்கும், பட்டத்துளசி அம்மனுக்கும், ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கும் பூச்சாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி குழந்தை வரம் வேண்டியவர்கள் வேண்டுதல் நிறைவேற்ற எடைக்கு எடை பூக்கள் போட்டு நேர்த்திகடன் செலுத்தினர். வரும், 24ம் தேதி இரவு 8 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும்விழாவும், இதை தொடர்ந்து குழந்தை வரம் வேண்டுவோருக்கு தயிர் சாதம் வழங்கும் வைபவம் நடைபெறும். நவம்பர் 04ம் தேதி காலை, பூவோடு எடுத்தல், நவம்பர் 05 தேதி கொடியேற்று விழா; மறுநாள் காலை அம்மன் அழைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்வு நடைபெறும். முக்கிய நிகழ்வான அக்கினி குண்டம் பிரவேசித்தல் நவம்பர், 07ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும். அன்று மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் வெகு விமர்சியாக நடக்கிறது. நவம்பர் 09ம் தேதி சப்தாபரணத்துடன் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி மாதத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதை தொடர்ந்து நவம்பர் 24ம் தேதி வரை கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
Next Story