பேராவூரணி அருகே  தீ விபத்து, மழையால் வீடு இடிந்தவர்களுக்கு  எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி

நிதியுதவி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வலப்பிரம்மன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பார்வதி (75), அண்மையில் இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, தீப்பொறி பட்டு குடிசை வீடு முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இதே போல, கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வீடு இடிந்த சானாகரை வெற்றிச் செல்வி, ஆண்டாகோட்டை ராமமூர்த்தி, சொர்ணக்காடு குமார், நெல்லியடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால், மணிமேகலை, தர்மலிங்கம், மங்களம், வீரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், கீழ மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாலதி, குணசேகரன், பாப்பா, இந்திரா, சக்தி, மேல மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையா, ராஜரெத்தினம், கழனிவாசல் நீலாவதி ஆகியோருக்கு சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவியை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கினார். இதேபோல், பேராவூரணி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகனும் நிதியுதவி வழங்கினார். நிகழ்வில், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன்,  சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் இளங்கோ, டாக்டர் கே.நாகராஜன், கவிஞர் மா.ப என்ற மா.பழனிவேல், கழனிவாசல் ராதாகிருஷ்ணன், மணக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ச.விஜயகுமார், துணைத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகுமீனா தங்கப்பன், பொறியாளர் அணி டி.இளையராஜா, கிளைச் செயலாளர்கள் வி.ஜெயபிரகாஷ், கோ.முருகேசன், சா.துரை, ப.ஆசைத்தம்பி, பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, சி.பெரியசாமி, கே.அய்யப்பன், ஜி.வீரையா, சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story