மேலப்பாளையத்தில் 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேலப்பாளையத்தில் 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஆடுகள் விற்பனை
நெல்லையில் மிகப்பெரிய ஆட்டு சந்தையாக திகழ்வது மேலப்பாளையம் ஆட்டு சந்தை ஆகும். இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று(டிசம்பர் 24) அதிகாலை முதல் விற்பனை களை கட்டியது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆடுகளை வாங்கி சென்றனர். கொடியாடு, சீமையாடு, நாட்டு ஆடு, வேலிஆடு, செம்மறி ஆடு என பல்வேறு ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக 1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Next Story