விழுப்புரம் அருகே சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு
Villuppuram King 24x7 |9 Jan 2025 4:10 AM GMT
சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு
விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோவிலில், இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த டிச.31ம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி, 10 நாட்கள் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை (ஜன.10) காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.சொர்க்கவாசல் திறப்பு வழிபாட்டில், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். அதற்காக விழுப்புரம் ஜோதி லட்டு தயாரிப்பு குழுவினர் சார்பில், 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி, விழுப்புரம் கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில், லட்டு கமிட்டி குழுவினர் மற்றும் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 10ம் தேதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
Next Story