திருவேங்கடம் ஆட்டுச்சந்தையில் 1கோடி ரூபாய் விற்பனை

திருவேங்கடம்  ஆட்டுச்சந்தையில்  1கோடி ரூபாய் விற்பனை
ஆட்டுச்சந்தையில் 1கோடி ரூபாய் விற்பனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் நடைபெறும் இங்கு தென்காசி , விருதுநகர், நெல்லை, ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பண்டிகை காலங்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று ஆட்டுச் சந்தை விற்பனை களைகட்டியது 1 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது சுமார் 1கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானது இங்கு ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story