ஏப்ரல் 1ம் தேதி முதல் ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் இல்லை : எஸ்பி அதிரடி

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் இல்லை : எஸ்பி அதிரடி
X
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் இல்லை : எஸ்பி அதிரடி
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் இல்லை, காவல்துறையினரின் அதிரடி முடிவு தமிழகத்தில் இந்தியாவிலேயே அதிக இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது திருவள்ளூர் மாவட்டத்திலும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது இதை போக்கும் விதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் போட வருபவர்களுக்கு வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல் நிரப்ப பங்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர் எனவே வருகிற ஏப்ரல் மாதம் முதல் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட வேண்டும் என்றால் ஹெல்மெட் கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர்.
Next Story