சேலத்தில் பாக்கு வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி வாலிபர் கைது

சேலத்தில் பாக்கு வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் வாழப்பாடி குறிச்சியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 68), பாக்கு வியாபாரி. இவரது நிறுவனத்தில் மேலாளராக அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல், இவருடைய மகன் தினேஷ் (30) உள்பட மேலும் 2 பேர் வேலை பார்த்தனர். 3 பேரும் சேர்ந்து பாக்கு வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயராமன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தினேசை போலீசார் கைது செய்தனர்.
Next Story