குமரி வாள் வீராங்கனைக்கு அதிமுக ரூ 1 லட்சம் 

குமரி வாள்  வீராங்கனைக்கு அதிமுக ரூ 1 லட்சம் 
X
எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
குமரி மாவட்டம், காட்டாத்துறை - புலிப்பனம் கிராமத்தை சார்ந்தவர் ஜெனிஷா. கடந்த 10 ஆண்டுகளாக வாள் வித்தை பயிற்சி செய்து வரும் இவர்  தேசிய அளவிலான போட்டிகளில் 3 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.        தந்தை இல்லாமல் தாயின் ஒரே வருமானத்தில் இந்நிலைக்கு வளர்ந்துள்ளதாகவும், தனது விளையாட்டு பயணம் இங்கே முடிவடையாமல் இதனை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டில் பயிற்சி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு பயிற்சிக்கு தேவையான நிதியை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசிடம் பல முறை விண்ணப்பம் செய்தும் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.        எனவே  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வழியாக எடப்பாடி கே பழனிச்சாமி இடம் இது தொடர்பான கோரிக்கை மனுவினை சென்னை சட்டமன்ற பேரவையில் உள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வழங்கினார். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை வாள்வித்தை வீராங்கனை ஜெனிஷாவிற்கு வெளிநாட்டு பயிற்சிக்காக வழங்கினார்.       இந்நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம், திருவட்டார் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயசுதர்சன், வீராங்கனையின் தாத்தா டேனியல் ஜோன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story