தென்னிந்திய அளவிலான பெண்கள் கபடி போட்டி: ரூ.1 லட்சம் பரிசு !
சூலூரில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை Best&Co சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பெண்கள் கபடி போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளை லீமா ரோஸ் வழங்கினார். இந்நிகழ்வில், திருவண்ணாமலை அணி முதல் பரிசாக ரூ.40,000, சென்னை அணி இரண்டாவது பரிசாக ரூ.30,000, கேரளா மற்றும் திருப்பூர் அணிகள் தலா ரூ.20,000 பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றன. பரிசளிப்பு விழாவில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், சர்வதேச நடுவர் கோபால், அமெச்சூர் தேர்வு குழு உறுப்பினர் சூலூர் சண்முகம், வழக்கறிஞர் எர்னஸ்ட் ராபின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



