ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 1.லட்சம், வெற்றிலையில் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்...

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 1.லட்சம், வெற்றிலையில் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்...
X
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 1.லட்சம், வெற்றிலையில் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. மேலும் கடந்த சில வாரங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு மஞ்சள் கயிறு அலங்காரம், சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம், வளையல் அலங்காரம், அன்னாபிஷேக அலங்காரம் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒன்பதாம் ஆண்டாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் ஒரு லட்சம் வெற்றிலை களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கூல் போன்றவை வழங்கப்பட்டது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
Next Story