காங்கேயத்தில் நடைபயிற்சி சென்ற காவலர் சாலையில் கிடந்த 1 சவரன் தங்க செயின் - காவல் நிலையத்தில் ஒப்படைப்பு - சக காவலர்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரோட்டில் கீழே கிடந்த ஒரு பவுன் தங்க செயினை எடுத்து உதவி ஆய்வாளரிடம்  ஒப்படைத்தது சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.
காங்கேயம் காவல் நிலையத்தில் காவலர் 1512 பாலுசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவர் காவல் ஆய்வாளர்க்கு வாகனம் ஓட்டி வருகிறார். இவர் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியான ராயல் ரெசிடென்சி முன்பு ஒரு பவுன் தங்க செயின் கிடந்துள்ளது. அதை பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்து காங்கேயம் உதவி ஆய்வாளர் கபில்தேவிடம்  ஒப்படைத்து உள்ளார். உதவி ஆய்வாளர் விசாரணை செய்துவிட்டு நகையின் உரிமையாளர் யார் என்று தேடி கண்டுபிடித்து ஒப்படைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஒரு சவரன் தங்க ஜெயின் விலை சுமார் இன்றய மதிப்பு ரூ. 85 ஆயிரம் இருக்கும் நிலையில் சாலையில் இருந்து கண்டெடுத்த தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது  காவலர் பாலுவின் நேர்மையை பாராட்டும் விதத்தில் உள்ளதாக உடன் பணிபுரியும் சக காவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரின் செயல் சமூக வலைத்தளங்களின் வேகமாக பகிரப்பட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் மக்கள்.
Next Story